மீண்டும் பணிக்கு திரும்பினர் ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் !
Thursday, December 15th, 2016
ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுக நிர்வாகத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து பணியாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப இணங்கியுள்ளனர்.
கடந்த 9 நாட்களாக இந்த தொழிற்சங்கம் போராட்டம் இடம்பெற்றது நிர்வாகிகளுடம் நடத்தப்பட்ட கலந்துரையாடலை அடுத்து தமது சத்தியாக்கிரக போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானித்தாக துறைமுக சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், துறைமுக முகாமைத்துவ நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களும் இன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக பணிக்கு திரும்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு பணிக்கு திரும்பாதவர்கள் பணியிலிருந்து விலகிச் சென்றவர்களாக கருதப்படுவார்கள் என துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
நீர் வழங்கல் வடிகாலமைப்பு ஒன்றிணைந்த கூட்டமைப்பு எச்சரிக்கை!
ஜனவரி 22 ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை - பெப்ரவரியில் சாதாரண தரம், மேயில் உயர்தரம் - புதிய நேர ...
அடுத்த ஆறு மாதங்களுக்கான மின் உற்பத்தித் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் - மின்சக்தி மற்றும் எரிசக்த...
|
|
|


