மீண்டும் டெங்கு வேகமாகப் பரவும் அபாயம்!

தற்போது நிலவிவரும் பருவப் பெயர்ச்சி மழையால் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவக்கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதுவரை சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளர்கள் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் ஜயசுந்தர பண்டார குறிப்பிட்டார்.
நாட்டின் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சலானது, தொற்று நோய் போன்று பரவுவதாக இலங்கை பொது சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.இடைக்கிடையே மழை பெய்வதாலும் உரிய நடைமுறையின்றி குப்பைகளைக் கொட்டுவதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன குறிப்பிட்டார்.
இதனால் டெங்கு நுளம்புகள் பரவாமல் சூழலை துப்புரவாக வைத்திருத்தல் அவசியம் எனவும் சுகாதார தரப்புகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளன.
Related posts:
உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டுக் காலம் நிறைவு - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
நீரை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்துங்கள் - நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபை கோரிக்கை !
இந்தியாவை மிரட்டும் கறுப்பு பூஞ்ஞை நோய் இலங்கையிலும் கண்டுபிடிப்பு!
|
|