மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைத்தியர் அர்ச்சுனா – நபரொருவர் பொலிஸாரால் கைது !
Monday, July 15th, 2024
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக நபரொருவர் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகராக இருந்த இராமநாதன் அர்ச்சுன மீண்டும் இன்று வருகிறார் என தெரிவிக்கப்படும் நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைப் பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வைத்தியசாலை முன்பாக நின்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக அண்மையில் பொதுமக்கள் கூடி பெருமெடுப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மீண்டும் இன்று பொதுமக்கள் கூடலாம் என்ற நிலையில் முன்னெச்சரிக்கையாக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனையும் மீறி சாவகச்சேரி பதில் வைத்திய அத்தியட்சகராக இருந்த இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
000
Related posts:
அனுமதி அட்டைகள் விரைவில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் - பரீட்சைகள் திணைக்களம்!
குறுகிய காலத்துக்குள் தொழில் நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள ஒரு இலட்சம் இலங்கையர்கள்!
காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு – இன்று எகிப்திற்கு பயணமாகின்றார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
|
|
|


