மிரட்டல் குற்றசாட்டு: கல்வி அமைச்சரை ஜனாதிபதி ஆணையத்தில் ஆஜராகுமாறு பணிப்பு!

Thursday, September 12th, 2019

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவாசத்தை அரசத் துறை ஊழல் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணையத்தில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சருடைய வழக்கில் சாட்சியம் அளித்த சாட்சியை மிரட்டியது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சரின் வண்ண புகைப்படங்களுடன் கூடிய பாட புத்தகங்களை அச்சிடுவது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பாக சாட்சியமளித்த பின்னர் கல்வி அமைச்சின் பணிப்பாளர் இளங்கசிங்க விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் முறைப்பாடு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான ஆணையத்தின் விசாரணையின்போது, அமைச்சரின் வண்ண புகைப்படங்கள் அவரது அறிவுறுத்தலின் பேரில் பாடப்புத்தகங்களில் அச்சிடப்பட்டிருப்பதாகவும், இதனால் அமைச்சிற்கு பாரிய செலவினங்களை ஏற்படுத்தியதாகவும் இளங்கசிங்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: