கோப்குழு அறிக்கை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பு!

Tuesday, November 22nd, 2016
மோசடி ஊழல்களை வெளிப்படுத்தும் கடந்த கோப் குழு 37அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு பிணைமுறி சம்பவம் தொடர்பில் முக்கியத்துவம் வழங்குமாறு தானே வலியுறுத்தியதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிணைமுறி சம்பவத்திற்கு தன்னையோ அல்லது அமைச்சின் மீதோ எவராலும் குற்றம் சுமத்தமுடியாது என்று பிரதமர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மத்தியவங்கி பிணைமுறி சம்பந்தமாக 1வருடம் முடிவுபெறுவதற்கு முன்னரே தாமே சட்டநடவடிக்கைகளுக்கு வழிவகை செய்ததாக பிரமார் சுட்டிக்காட்டினார்.
வழக்கை தொடருங்கள் எனக்கு பிரச்சினை இல்லை. பிரதமர் அமைச்சர் என்ற ரீதியில் எனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளேன். நாம் கிறிங்பொன்ட் ஹெஜின் குறித்து ஆராய்ந்து வருகின்றோம். இது குறித்து பேசும்;பொழுது சிலர் அதிர்ச்சியடைகின்றனர். எமக்கு ஓரளவு காலம் எமது பணிகளை முன்னெடுக்க தேவை. அன்று இந்த சபைக்கு எதுவும் கூறாமலே பணிகள் இடம்பெற்றன. எனக்கு பாராளுமன்றம் நிதியை நிர்வகி;க்கவேண்டும் என்பதே ஆகும். எமது பொறுப்பை நாம் நிறைவேற்றியுள்ளோம்

சட்டமா அதிபரிடம் கோப் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் சரியில்லாவிட்டால் சரத் என் சில்வாவையோ மொஹான் பீரிஸையோ நியமிக்குமாறு கோருங்கள். யாருக்கு எதிராக வழக்கு தொடர்வது என சட்டமா அதிபர் முடிவு செய்வார்.பிற்றிப்பண குழு அமைத்தோம். அந்த அறிக்கையும் வந்தது. பாராளுமன்ற உறுப்பினர். ஹந்துன்நெத்தி அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டார். புதிய குழுவொன்றும் வந்தது. எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் அதற்குள் உள்வாங்கினோhம். அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு இந்த சிபார்சு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் சிபாரிசு ஒன்றேயாகும். சிபாரிசு என்னிடத்தில் வைத்திருக்கமுடியாது .

அரசாங்கத்தினால் ஆலோசனை வழங்க முடியும் சட்டமா அதிபர் சபாநயகர் ஆலோசனைகளை பெற்று செயற்படுமாறு கூறமுடியும். இது பாராளுமன்றக் குழுவாகும். இதில் எனது அமைச்சுக்கு உரிமையில்லை. எனது பொறுப்புக்களை நான் நிறைவேற்றியுள்ளேன். சட்டமா அதிபர் தேவையில்லையாயின் வேறு யாரிடமாவது கூறிசெய்யுங்கள்.உங்களுக்கு வேறு யாரையாவது நியமிக்க வேண்டுமானால் கட்சி தலைவர் கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கலாம். அது வரை சட்டமா அதிபர் சபாநாயகருடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்.

ஸ்ரீலங்கன் விமான சேவையை மூடும் நிலை உருவானது. அதனை பாதுகாத்து வருகிறோம். கடந்த கால மோசடிகள் 1 திருட்டுகளுக்காக ஆயிரம் மத்திய வங்கிகளை மூட நேரிடும். ஒன்றிணைந்த எதிரணியும் பிளவுபட்டுள்ளது.பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர் என்ற வகையில் எனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளேன். இந்த பணியை துரிதமாக நிறைவு செய்ய வேண்டும். சட்ட ரீதியாக யார் பொறுப்பு கூற வேண்டும் என்பது தெளிவாகும் என்றும் பிரதமர் மேலும் பாராளுமன்றில் தெரிவித்தார்.

af7bec0f30e30f82299fde75ab0ad8bf_XL

Related posts: