மியன்மாரில் இருந்து இலங்கை அரிசி இறக்குமதி!
Sunday, February 5th, 2017
இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலையை அடுத்த சில நாட்களில் குறைக்கவுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோகிராம் அரிசியின் விலையை 76 ரூபாவிற்கு கீழ் விற்பனை செய்வது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மியன்மாரில் இருந்து,உடனடியாக அரிசித் தொகை இறக்குமதி செய்யப்பட்டு ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 60 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்தக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
ம்ணிவண்ணன் காவல்படை உருவாக்கியது சட்டவிரோதமானது - சீ.வீ.கே.சிவஞானம்!
நியாயாதிக்க நிறுவனங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் நிர்வாக சபைக் கூட்டங்கள் இடைநிறுத்தப்படவுள்ளத...
உள்ளூராட்சி தேர்தல் - சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதி...
|
|
|


