மின் பாவனையை சிக்கனப்படுத்தக் கோரிக்கை!
Thursday, February 2nd, 2017
நீர் நிலைகளில் போதுமான நீர் இன்மையால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் தேவை ஏற்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.தற்போதைய வறட்சியான காலநிலை இன்னும் முடிவடையவில்லை என நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த வாரத்தில் மழை பெய்தாலும் மின் உற்பத்திக்கு போதுமானளவு நீர் கிடைக்கவில்லை என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். இதேவேளை, மின் தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுக்க மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தயாராகவுள்ளது என தெரிவித்த அமைச்சர் தடையின்றி மக்களுக்கு மின்சாரம் வழங்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

Related posts:
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் நடைபாதை வியாபாரத்திற்கு முற்றாகத் தடை!
காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு - ...
கடந்த ஆண்டில் 6.3 பில்லியன் ரூபா இலாபம் - ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவிப்பு!
|
|
|


