மின் கட்டண திருத்த யோசனை – இறுதித் தீர்மானம் ஒரு வாரம் ஒத்திவைப்பு!

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பிலான இறுதி தீர்மானம் அடுத்த வாரம் கூடவுள்ள அமைச்சரவை கூட்டம் வரை பிற்போடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் 2023 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நேற்று இடம்பெற்றது.
இதன்போது, மின் கட்டண அதிகரிப்பு தொடர்பிலான யோசனையை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர முன்வைத்திருந்தார்.
திருத்தம் தொடர்பிலும் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல தரப்பினரின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் இது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பிலான யோசனை மீதான இறுதி தீர்மானம் அடுத்த வாரம் கூடவுள்ள அமைச்சரவை கூட்டம் வரை பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதியின் இணையத்தளத்துள் பிரவேசித்த மாணவன் கைது!
உள்ளூராட்சி தேர்தல்கள் தொடரபான பணிகள் ஆரம்பம் - தேர்தல்கள் ஆணைக்குழு!
விலை உயர்வே எரிவாயு சிலிண்டர் வெடிப்புக்கு காரணம் - முறையான விசாரணைகளை உறுதி செய்வது தமது கடமை - இரா...
|
|