மின்விநியோக தடை தொடர்பில் வெளியான தகவல்!

Friday, January 7th, 2022

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாளாந்த மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் உள்ள சிரமங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலைய அமைப்பின் செயலிழப்புகள் காரணமாக இந்த மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்றிரவு கொழும்பு உட்பட பல பகுதிகளில் மின்சார விநியோகம் பல முறை தடைப்பட்டது.

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் உள்ள ஜெனரேட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இரவு 9.30 மணியளவில் மின்சாரம் வழமைக்குத் திரும்பியதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எப்படியிருப்பினும் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் அமைப்பு செயற்பாடுகளை தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நெல்லியடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து பெண் கிருமித் தொற்றுக் காரணமா...
சீனிக்கான வரி குறைப்பை விகாரையில் இருக்கும் போது தெரிந்து கொண்டேன் - அமைச்சர் பந்துல குணவர்த்தன தெர...
கோப்பாய் பகுதியில் பிரதான மின் வடத்தில் திடீரென ஏற்பட்ட தீ - சில மணி நேரம் தடைப்பட்டது மின்சாரம் !