மின்சார சபை, பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க கூட்டு ஒப்பந்தம் இரத்து – 3 வருடத்திற்கு ஒருமுறை 25% சம்பள அதிகரிப்பு வருடாந்த போனஸ் சலுகைகள் கிடையாது – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

3 வருடங்களுக்கு ஒருமுறை 25% சம்பள உயர்வு, வருடாந்த போனஸ், உள்ளிட்ட சலுகைகள் கொண்ட , மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க கூட்டு ஒப்பந்தங்களை தொடரவோ அல்லது புதுப்பிக்கப்படவோமாட்டாது என மின்சக்தி மற்றும் வலுசக்ததி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (10) அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதற்கான செயன்முறைகளை ஆரம்பிக்குமாறு, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளருக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மூவாயிரம் மொழி உதவியாளர்கள் அரச நிறுவனங்களுக்கு இணைப்பு!
இலங்கையின் பொருளாதாரம் இவ்வருடம் வீழ்ச்சி காணும் - உலகவங்கி எச்சரிக்கை!
ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய அமீரகமாக தலிபான்கள் பிரகடனம்!
|
|