மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனங்களால் 8 மாதங்களில் 85,400 கோடி நட்டத்தில் – நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Monday, April 3rd, 2023

மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகிய மூன்று நிறுவனங்களும் கடந்த வருடத்தில் முதல் எட்டு மாதங்களில் மாத்திரம் 85,400 கோடி ரூபா நட்டமீட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடி அழுத்தங்களை சமப்படுத்துவதற்காக நாடாளுமன்ற பிரிவின் கண்காணிப்பு தெரிவுக்குழுவின் தலைவர் காமினி வலேபொட இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அரசாங்க நிறுவனங்களில் நிலவும் நட்டத்தில் 99% இந்த நிறுவனங்களின் மூலமே ஏற்பட்டதாகவும் கடந்த பல வருடங்களாக இந்த மூன்று நிறுவனங்களையும் நட்டத்திலேயே இயங்கச் செய்துவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், அதனால் நாடு பெரும் கடன்சுமையை சுமக்க நேர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நாட்டின் 52 முக்கிய அரச தொழிற்துறைகள் கடந்த வருடத்தின் முதல் எட்டு மாதத்தில் 72,600 கோடியை நட்டமீட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனங்களில் 52 அரச தொழில் முயற்சி நிறுவனங்களில் 32 நிறுவனங்கள் வரி அறவீட்டுக்கு முன்பதாக 13,400 கோடி இலாபம் பெற்ற நிறுவனங்கள் என்றும் ஏனைய 21 நிறுவனங்களும் 86,100 கோடி ரூபா நட்டமீட்டியுள்ளமை கணிப்பீட்டின் மூலம் தெரியவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிறுவனங்களை மீள இலாபமீட்டும் நிறுவனங்களாக கட்டியெழுப்புவதானால் அதற்கான ஒரே வழி தனியார்மயப்படுத்துவதே எனக்குறிப்பிட்டுள்ள அவர், அரச மற்றும் தனியார் இணைந்த செயற்பாட்டின் கீழ் அதனை முன்னெடுத்துச் செல்ல முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்கல் நிறுத்தம் - அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்...
மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் - இல்லையேல் மீண்டும் சவாலை எதிர்கொள்ள நேரிடும் என இரா...
பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்யும் கடை மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய ...

இளைஞர்களுக்கு குறைந்த வட்டியுடன் வணிகக் கடன் - அமைச்சர் நாமல் மத்திய வங்கியுடன் விஷேட கலந்துரையாடல்!
பேரிடர்களிலிருந்து பாதுகாக்க கோரி கல்லுண்டாய் குடியிருப்பு மக்கள் மாவட்டம் செயலகம் முன்பாக கவனயீர்ப...
ரஷ்யா - யுக்ரைன் விடயத்தில் இலங்கை நடுநிலை வகிக்கும் - வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே அறிவிப்ப...