பேரிடர்களிலிருந்து பாதுகாக்க கோரி கல்லுண்டாய் குடியிருப்பு மக்கள் மாவட்டம் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

Monday, November 15th, 2021

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கல்லுண்டாய் புதிய குடியிருப்பு வாழ் மக்கள் மழை காலங்களில் வெள்ளத்தில் மூழ்குவதால் வடிகாலை ஏற்படுத்தித் தருமாறு கோரி இன்று (15) முற்பகல் யாழ்.மாவட்ட செயலகத்துக்கு முன்னால் பதாதைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த குடியிருப்பை பேரிடர்களிலிருந்து பாதுகாத்திடு, உரிய வடிகாலமைப்பு திட்டங்களை செயற்படுத்து, நமக்கான வாழ்க்கை உறுதிப்படுத்து, மற்றும் எங்கள் பிள்ளைகளின் அடிப்படைத் தேவைகளை உணருங்கள், வெள்ளப்பெருக்கை தடுத்து நிறுத்து, இயற்கை பாதிப்புகளை பாதுகாக்க வேண்டும். என்ற கோரிக்கைகளை வலியுறுத்திய பதாதைகளை தாங்கியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகம், யாழ்.மாவட்ட செயலக அதிகாரிகளிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

இதேவேளை கல்லுண்டாய் குடியிருப்பில் 85 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். மழை காலங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து இடம்பெயரும் நிலைமைக்கு ஒவ்வொரு வருடமும் ஆளாகின்றனர். யாழ்.சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்கு முன்னால் கடந்த வருடம் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டவர்கள். தீர்வு கிடைக்காத நிலையில் இன்று மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts:

வைபர் வட்சப் ஊடாக வடக்கு மாகாண அதிபர் ஆசிரியர்களை குறிவைக்கும் காவாலிகள் – அவதானமாக இருக்குமாறு எச்ச...
வெளியானது அதிவிசேட வர்த்தமானி - பலத்த இராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையில் இருந்து வெளியேறினார் முன்...
இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு வறட்சி நிலை அறிவிப்பு - நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்து!