மின்சார சபை ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

Sunday, December 17th, 2017

கொழும்பிலுள்ள மின்சார சபையின் தலைமைக் காரியாலயம் முன்பாக கடந்த 2 நாட்களாக மின்சார சபையின் நிரந்தரத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்பொழுது மின்சார சபையின் சாதாரண தொழிலாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவுக்கும் குறைவாகவே வேதனம், மேலதிக கொடுப்பனவுகள் கிடைக்கின்றன. ஆனால் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கடமையாற்றும் பொறியியலாளர்களுக்கு 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட சம்பளம் கிடைக்கிறது. அவர்கள் நாங்கள் மின்கம்பிகளில் ஏறி நின்று வேலை செய்யும் போது அதனைக் கண்காணிப்பதற்கு கூட வரமாட்டார்கள். அது மட்டுமல்லாமல் தற்போது மின்சார சபையில் அரசியல் ரீதியாக தொழில்கள் வழங்கப்படுகின்றன.

அதனை உடன் நிறுத்த வேண்டும். அத்துடன் எங்களது பிரச்சினைகளையும் சம்பள முரண்பாடுகளையும் அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும். ஓரிரு நாட்களில் எங்களுக்கு தீர்வு கிட்டாவிட்டால் நாடு முழுவதும் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளதாக இவ் ஊழியர் சங்கத்தின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

Related posts: