மின்சார கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பான தரவுகள் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைப்பு!

Saturday, January 13th, 2024

மின்சார கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பான தரவுகள் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு (PUCSL) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அந்த தரவுகளுக்கு அமைவாக மின் கட்டண திருத்தம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேற்கொள்ளவுள்ளது.

மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கான கோரிக்கை அடங்கிய பிரேரணை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் நேற்று (கையளிக்கப்படும் என்று இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த குறிப்பிட்டிருந்தார்.

மின்சாரக் கட்டணங்கள் மூலம் பொதுமக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். குறைந்த வருமானம் கொண்டவர்கள் நிச்சயமாக இந்த நன்மைகளைப் பெறுவார்கள்.

கடந்த சில மாதங்களில், குறிப்பாக கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கையில் கணிசமான மழை பெய்து வருவதால், கட்டணக் குறைப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் நேற்று சுட்டிக்காட்டியிருந்தார்.

கடந்த ஜனவரி 05 ஆம் திகதி மின் கட்டண திருத்த முன்மொழிவு ஏற்கனவே இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும், பெப்ரவரி முதல் வாரத்தில் மின் கட்டணங்கள் குறைக்கப்படலாம் என்றும் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

எனினும், இந்த தகவலை மறுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அவ்வாறான முன்மொழிவுகள் எதனையும் இதுவரை பெறவில்லை என்று கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: