மின்சார உற்பத்தி வீழ்ச்சியடையும் அபாயம்!

Wednesday, March 6th, 2019

மத்திய மலைநாட்டின் நீரேந்து பிரதேசங்களில் கடந்த மூன்று மாதகாலமாக நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகெல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 30 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக மின்சார சபையின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

காசல்ரீ நீர்த்தேக்கத்தின நீர்மட்டம் சுமார் 40 அடி வரையில் குறைவடைந்துள்ள நிலையில், மவுஸ்ஸாகெல நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 38 அடி வரை குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை பயன்படுத்தி கெனியோன், லக்‌ஷபான, புதிய லக்ஷபான, பொல்பிட்டி மற்றும் விமலசுரேந்திர போன்ற மின் ஆலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இந்த நிலையில், காசல்ரீ நீர்த்தேக்கத்தில் தற்போது நிலவும் நீர் கொள்ளளவில் 25 சதவீதம் வரை மின்சாரம் உற்பத்திக்கு பெற்றுக்கொள்ள முடியும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகெல நீர்த்தேக்கங்களில் இருந்து குடிநீர் பெற்றுக்கொடுப்பதற்காக களனி கங்கைக்கு, நீரை விடுவிப்பதற்கு நீரின் கொள்ளளவை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என மின்சார சபையின் உயரதிகாரி மேலும் தெரிவித்தார்.

Related posts: