மின்சார உற்பத்திக்காக 51 பில்லியன் மேலதிக செலவு– மின்சக்தி அமைச்சு!

Wednesday, March 1st, 2017

எதிர்வரும் 6 மாதங்களில் மின்சார உற்பத்திக்காக 51 பில்லியன் ரூபா மேலதிக செலவீனத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பித்தல் சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நீர்மின் உற்பத்தி தற்போது 8 முதல் 10 வீதத்திற்கு இடையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள பிரதான நீர்த் தேக்கங்களில் தற்போது 30 முதல் 31 வீதமான மட்டத்திலேயே நீர் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாளாந்த மின்சார தேவையின் மிகக் குறைந்தளவு மின்சாரமே நீர்மின் உற்பத்தி மூலம் பெற்றுக் கொள்ளப்படுவதாகவும் மிக்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

download15

Related posts: