மினுவாங்கொட போன்று மற்றுமொரு கொரோனா கொத்தணி ஏற்படும் ஆபத்து – எச்சரிக்கும் இராணுவ தளபதி!

Monday, October 12th, 2020

மினுவாங்கொட கொரோனா கொத்தணி போன்று மற்றுமொரு கொத்தணி ஏற்படும் ஆபத்து உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

முதல் சுற்றில், மக்கள் உட்பட பலர் கொரோனாவின் கட்டுப்பாட்டை மிகைப்படுத்தியதாகவும், இந்த நிலைமை மற்றொரு அலைக்கு வழிவகுத்தது என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

ஏதோ ஒரு இடத்தில் சிறிய தவறு அல்லது அலட்சியம் ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்கவை அடிப்படையாக கொண்டு மற்றுமொரு கொரோனா கொத்தணி ஏற்படும் ஆபத்து உள்ளது. அந்த ஆபத்து நாட்டின் எந்தவொரு பகுதியிலும் எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்பட கூடும் என அவர் கூறியுள்ளார்.

இம்முறை, முதல்முறை போன்று கொரோனாவை கட்டுப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்தாமல் இருப்பதற்கும் மக்களின் செயற்பாடே தீர்மானிக்கவுள்ளதாக இராணுவ தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் வழங்கும் ஆதரவிற்கமைய கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு முழுமையான முயற்சிகளை மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: