மாலைதீவு கடலில் சடலமாக கரையொதுங்கிய வடமராட்சி மீனவரின் உறவினருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நிதியுதவி!

மன்னாரிலிருந்து கடற்தொழிலுக்குச் சென்றிருந்த நிலையில் மாலைதீவு கடலில் சடலமாக கரையொதுங்கிய வடமராட்சி மீனவரின் உறவினருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நிதியுதவி வழங்கியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி கரவெட்டி மேற்கு, சிறீநாரதா வீதியைச் சேர்ந்த பாண்டி என அழைக்கப்படும் செல்வராஜா ஜெயராம் என்பவரே படகு பழுதடைந்தமையால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில் செல்வராஜா ஜெயராமின் குடும்பத்தினருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு இலட்சம் ரூபா உதவி நிதி வழங்கியுள்ளது.
குறித்த நிதியை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரான்ஸ் கிளையின் முக்கியஸ்தர் நரேஷ் – மகான் விஜயபாலன் (விஜயன்) அவர்களின் பங்களிப்பில் கட்சியின் கரவெட்டி பிரதேசசபையின் 15 ஆம் வட்டாரச் செயலாளர் திருமதி இலங்கேஸ்வரன் மங்கையற்கரசி தலைமையில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் நலனில் அக்கறை: பிரதமர் ரணிலிடம் சோனியாகாந்தி!
உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் மீண்டும் திரிபோஷா உற்பத்தி - சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரக...
தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக அமைச்சர் டக்ளஸ் இருக்கின்றார் – யாழ் பல்கலை துணைவேந்தர் பு...
|
|