மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவிப்பு!
Thursday, September 26th, 2024
இலங்கையில் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.
மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என சமூக சுகாதார வைத்திய நிபுணர் ஹசரெலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.
இலங்கையில் வருடாந்தம் 5,000க்கும் அதிகமான மார்பக புற்றுநோயாளர்கள் பதிவாகுவதாகவும் தெரிவித்துள்ளார்
000
Related posts:
நாட்டில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கண் பார்வையில்லை!
கூட்டமைப்புக்குள் குழப்பம் : முதலமைச்சரின் உத்தரவையும் மீறி பிரதி அவைத்தலைவர் தெரிவு இன்று?
சதொசவில் நியாய விலையில் பொருட்கள் கிடைக்கும் - பல பொருட்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அ...
|
|
|


