மார்ச் மாதம் இரசாயன உரத்தை விநியோகிக்க முடியும் – உர இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Saturday, December 4th, 2021

இரசாயன உர இறக்குமதிக்கு அரசாங்கம் மீள அனுமதி வழங்கியுள்ள நிலையில், இறக்குமதிக்கான முதற்கட்டப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உர இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் வெளிநாட்டு நிறுவனங்களுடன், அதற்கான உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கான ஆவணங்களைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் சுஜீவ வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், உர இறக்குமதிக்கான வழமையான நடவடிக்கைகளின் பிரகாரம், இலங்கைக்கு உரம் கிடைப்பதற்கு 3 மாத காலமாகும்.

இதற்கமைய, எதிர்வரும் மார்ச் மாதமளவில் விவசாயிகளுக்கு இரசாயன உரத்தை விநியோகிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சுஜீவ வலிசுந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: