மாயமாகும் பயணப்பொதிகள்: கட்டுநாயக்க விமானநிலையத்தில் மர்மம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த மூன்று மாத காலப் பகுதியில் சுமார் 75 பயணப் பொதிகள் காணாமல் போயுள்ளன.
குறித்த விமான நிலையத்தின் மூலம் நாட்டுக்கு வரும் பயணிகளின் பயணப் பொதிகள் காணாமல் போனமை தொடர்பில் 75 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 25ஆம் திகதி காணாமல் போன பயணப் பொதி ஒன்றை சீ.சீ.ரீ.வி கமரா மூலம் எடுத்துச் சென்றவர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ பயணப் பொதிகள் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பயணப்பொதிகளை களவாக எடுத்துச் சென்றமை குறித்து சிலருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
845 இலங்கைத் தமிழர்கள் பிரித்தானியாவில் பாதுகாப்பு கோரியுள்ளனர்!
கடலுணவு உற்பத்தி – யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் வீழ்ச்சி!
ஊரடங்கு உத்தரவு: மீறிய 17,717 பேர் கைது - பொலிஸ் ஊடகப் பிரிவு!
|
|