மாத இறுதி வரை நாட்டிலுள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணையுங்கள்- நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை!
Monday, March 7th, 2022
இன்றுமுதல் மார்ச் 31 ஆம் திகதிவரை தமது பிரதேசத்தில் உள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்குமாறும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் உள்ளுராட்சி தலைவர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் மின்சாரத்தை சேமிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பசில் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.
அத்தோடு மின்சார பாவனையை குறைப்பதற்கான மாற்று வழிகள் குறித்து அறிவிக்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த கோரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இராசாயன மருந்து மூலம் பழுக்க வைத்த பழங்களை விற்கும் வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை!
இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்!
மரநடுகை தொடர்பில் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் விசேட அறிவிப்பு!
|
|
|


