மாதத்தின் முதல் 15 நாட்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
Tuesday, October 17th, 2023
இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த மாதம் 50 ஆயிரத்து 395 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
12,261 இந்திய சுற்றுலாப்பயணிகளும், 4,554 ரஷ்ய சுற்றுலாப்பயணிகளும், 3,269 சீன சுற்றுலாப்பயணிகளும், 3,180 ஜேர்மன் சுற்றுலாப்பயணிகளும் இந்த மாதம் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ். குடாநாடு ஹர்த்தால் காரணமாக முற்றாக ஸ்தம்பிதம்!
13, 374 வாக்களிப்பு நிலையங்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தலில்!
நுகர்வோர் அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்!
|
|
|


