மாணவி கிருசாந்தியை நெஞ்சில் நினைவேந்துகின்றோம்.!

Thursday, September 7th, 2017

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவியான குமாரசாமி கிருசாந்தியின் இருபத்தோராவது நினைவுதினம் இன்றாகும். இந்த நாளில் கிருஷாந்தியுடன் மரணித்த அவரது தாயார் சகோதரன் உள்ளிட்ட அனைவரையும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி நினைவேந்தி நிற்கிறது.

இராணுவத்தினரது கட்டுப்பாட்டின் கீழ் யாழ்ப்பாணம் வந்தபின்னர் தமிழ் மக்கள் மீள்குடியேறி தமது இயல்பு வாழ்வுக்கு படிப்படியாக திரும்பிக்கொண்டிருந்த சமயம் நடந்தேறிய இந்த சம்பவமானது தமிழ் மக்களுக்கு பெரும் அச்சத்தை உண்டுபண்ணியிருந்தது.

மாணவி சிருஷாந்தி கொலைசெய்யப்பட்ட சம்பவத்தை மக்களால் வெளிக்கொண்டு வருவதற்கும் அதனை கண்டித்து போராட்டங்களை நடத்தவதற்கும் அன்றைய காலப்பகுதி உரியதாக அமைந்திருக்கவில்லை. அச்சம் நிலவிய காலமான 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற இத் துயரச் சம்பவத்தால் நீதிமன்று சென்று நியாயத் தீர்ப்புக்களைக் கூட தமிழ் மக்களால் பெற்றுக்கொள்ள முடியாத நிலை  அன்று காணப்பட்டது.

தேசியம் பேசி தமிழ் மக்களை வியாபாரப் பொருள்களாக்கி சுயநலம் கண்டுவரும் இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்போ அன்றி இதர தமிழ் அமைப்புக்களோ அந்த அப்பாவி மாணவியின் படுகொலைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க அன்று முன்வந்திருக்கவில்லை.

ஆனாலும் இராணுவத்தினரது எதிர்ப்புக்களையும் அச்சுறுத்தல்களையும் மீறி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியாகிய நாம் காணாமல் போனோர் சங்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி மாணவியின் படுகொலைக்கு நியாயம் வேண்டி மாணவர்களையும் மக்களையும் ஒன்றுதிரட்டிப் போராடி குறித்த படுகொலைச் சம்பவத்தை உலகறியச் செய்திருந்தோம்.

எமது போராட்டம் காரணமாக குறித்த பாதகச் செயலை செய்த இராணுவத்தினர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர். இதனூடாக அந்த அப்பாவி மாணவியின் மரணத்திற்கு நியாயத் தீர்ப்பையும் பெற்றுக்கொடுத்தோம்.

மாணவி கிரஷாந்தியின் ஞாபகங்களை நெஞ்சில் நினைவேந்தி நிற்கும் நாம் அவரது இழப்பினால் நீடித்த துயரை இதுவரை சுமந்து நிற்கும் அனைத்து உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Related posts:


ஞாயிரன்றே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இறுதித்தீர்மானம் - கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ...
சுய பூட்டுதல் வரவேற்கத்தக்கது - சிறு தொழில்கள் செய்து வாழ்க்கையை நடத்தும் மக்களையும் கருத்தில் கொள்ள...
இலங்கை வாழைப்பழங்கள் சீனாவுக்கு ஏற்றுமதி - சீன அரசாங்கத்தின் பிரதிநிதிகள் விவசாய அமைச்சர் மஹிந்த அமர...