மாணவர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை கட்டுப்படுத்த பொலிஸாரின் வீதியோர கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் றீகன்!

Thursday, August 2nd, 2018

பாடசாலைகள் ஆரம்பிக்கும் நேரங்களிலும் முடிவுறும் நேரங்களிலும் மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கட்டப்படுத்த வீதியோரங்களில் அதிகளவான பொலிஸாரை நிறுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகளிலீடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றீகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு நேற்றையதினம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்

மேலும் அவர் தெரிவிக்கையில் –

பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து நடத்தப்படும் துன்புறுத்தல்கள் மற்றும் சமூக சீரழிவான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு உரிய வழிமுறைகளை கையாளாமையே இன்று பாடசாலை ஆரம்பிக்கும் நேரங்களிலும் முடிவுறும் நேரங்களிலும் மாணவர்களை நோக்கி குறிப்பாக மாணவிகளை நோக்கி அதிகளவான வன்முறைச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்டுகின்றன.

இந்த துர்ப்பாக்கிய நிலையை கட்டுப்படுத்தாதுவிட்டால் எமது மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் இன்றும் படு மோசமான நிலைக்கே செல்லும் நிலை உருவாகும்.

அந்தவகையில் இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்த குறித்த நேரங்களில் பொலிசாரின் கண்காணிப்பை அதிகளவில் மேற்கொள்வதனூடாக ஓரளவேனும் கட்டுப்படுத்த முடியும். எனவே இதற்கான ஒழுங்குமுறைகளை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


எந்தவொரு மாணவருக்காவது அநீதி இழைக்கப்பட்டிருக்குமாயின் நடவடிக்கை எடுக்கப்படும் – கல்வி அமைச்சு!
அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் இலங்கைக்கு செல்லவும் – தனது நாட்டு மக்களுக்கு பிரித்தானியா அறிவுற...
இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் - பிரதமரிடம் இலங்கைக்கான...