மாணவர்களை எச்சரிக்கை செய்யும் சுங்கப் பிரிவு!

Monday, August 13th, 2018

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து தீன்பண்டங்கள் போன்ற போதைப்பொருள் வியாபாரம் ஒன்று மேற்கொள்ளப்படுவதாக இலங்கை சுங்க பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாடசாலைகளை அண்டிய பகுதிகளில் ஸ்டோபரி சுவையுடனான இந்த தின்பண்ட விற்பனை பரவலடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான தின்பண்டங்களை உண்ணும் பாடசாலை மாணவர்கள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நிகழ்வுகளும் பதிவாகியுள்ளதாகவும் சுங்க பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

போதைப்பொருள் கலக்கப்பட்ட இத்தகைய திண்பண்டங்கள், சொக்லேட், செரி, கோலா, திராட்சை மற்றும் தோடை போன்ற சுவைகளில் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அறிமுகம் இல்லாதவர்கள் வழங்கும் உணவுகளை உட்கொள்வதை தவிர்க்குமாறும், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இது குறித்து அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் சுங்க பிரிவினர் கோரியுள்ளனர்.

Related posts: