மாணவர்களுடன் முறைகேடுகளாக நடந்த ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதை வலயக் கல்விப் பணிப்பாளர் உறுதிப்படுத்த வேண்டும் – வடக்கு கல்வி அமைச்சின் செயலர் பற்றிக் டிரஞ்சன் அறிவுறுத்து!
Monday, August 14th, 2023
வடக்கு மாகாணத்தில் பாடசாலைப் பிள்ளைகளுடன் முறைகேடுகளாக நடந்த ஆசிரியர்களுக்கு எதிராக நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதை வலயக் கல்விப் பணிப்பாளர் உறுதிப்படுத்த வேண்டும் – இவ்வாறு வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர், வடக்கு மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோருடன் நேற்றுமுன்தினம் (12) இடம்பெற்ற நீண்ட கல்ந்துரையாடலிலேயே மேற்படி விடயத்தை அவர் வலியுறுத்திக் கூறியுள்ளதாக அறியமுடிகின்றது.
வடக்கு மாகாணத்திலுள்ள ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பிலும், சில வலயங்களில் மேலதிகமாக உள்ள ஆசிரியர்கள் தொடர்பிலும், ஆசிரியர் வளத்தின் சமமான பங்கீடு தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் மாணவர்கள் காயம்டையும் அளவுக்கு ஆசிரியர்கள் தண்டிப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையா டப்பட்டுள்ளது. இவ்வாறானவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை சரியான முறையில் எடுக்கப்படவேண்டும். அத்துடன் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் இதனைக் கண்காணிக்கவேண்டும்.
மேலும், தொடர்ச்சியாக இதே செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தவேண்டும் என்றும் கல்வி அமைச்சின் செயலர் அறிவுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


