மாணவர்களுக்கான  வட்டியில்லா கடன் திட்ட கால எல்லை நிறைவு!

Tuesday, March 20th, 2018

2018ஆம் ஆண்டு வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் கால எல்லை இன்றுடன்  நிறைவடைகிறது.

இந்த வட்டியற்ற மாணவர் கடனுதவித் திட்டம் 2016ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் பட்டதாரிக் கற்கைநெறியைத் தொடர்வதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 8 இலட்சம் ரூபாவை அரசாங்க வங்கிகள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.  இந்தக் கடன் தொகைக்கான தவணைக் கட்டணம் 5 வருடங்களின் பின்னர், மாணவர்கள்தொழிலில் ஈடுபடும் போது அறிவிக்கப்படும்.

குறித்த கடன் திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் மாணவர்கள் உள்வாங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது என உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த கடன் திட்டத்திற்கு அரச பல்கலைக்கழகம் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைத் தொடர தகுதி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாதுஎனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: