மாணவர்களுக்கான இரண்டாம் தவணை விடுமுறை அறிவிப்பு!
Tuesday, July 30th, 2019
அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் முதலாம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் காரணமாக பாடசாலைகளின் இரண்டாவது தவணைக்கான கல்வி அமர்வுகள் திட்டமிடப்பட்ட திகதியை விட மிகவும் தாமதமாக தொடங்கியது.
பாடசாலையின் இரண்டாம் தவணைக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஏப்ரல் 22 ஆம் திகதியே ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் 6 முதல் உயர்தர மாணவர்களுக்கு மே 6 ஆம் திகதியும் ஆரம்ப பிரிவினருக்கு 13 ஆம் திகதியும் இரண்டாம் தவணை நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாரந்தனையில் மாணவனின் சடலம் மீட்பு!
வலயக்கல்வி பணிப்பாளருக்கு எதிரான போராட்டத்திற்கு ஆசிரியர் சங்கம் அழைப்பு!
இலங்கை – நேபாள அரச தலைவர்கள் சந்திப்பு - அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது க...
|
|
|


