மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வரை பாடசாலைகளை திறக்க முடியாது – கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவிப்பு!
Monday, August 9th, 2021
ஏற்கனவெ திட்டமிட்டதன் பிரகாரம் செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான கல்விசார் ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தாலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வரை பாடசாலைகளை திறக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து சுகாதார பிரிவினருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் அதற்கான அனுமதி கிடைத்தவுடன் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்பதாக பாடசாலைகளை மீள திறக்க அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது என கடந்த வாரம் ஜி.எல். பீரிஸ் தெரிவித்திருந்தார்.
அத்தோடு பாடசாலைகளை திறப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டும் என அழைப்பு விடுத்திருந்த நிலையில் கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


