மாகாண சபை தேர்தல் தொடர்பில் பிரதமர் தலைமையில் இறுதித்தீர்மானம் – எதிர்வரும் 19 ஆம் திகதி கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு!
Tuesday, April 6th, 2021
மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பாக இறுதித் தீர்மானத்தை எடுக்கும் வகையில் எதிர்வரும் 19 ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் எனவும் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாகாண சபை தேர்தல்களை நடத்துவது தொடர்பாக பிளவுபட்ட கருத்து இருப்பதால் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பாக ஒரு திட்டவட்டமான முடிவை எடுக்க வேண்டும் என்று ஆளும் கட்சி தெரிவித்துள்ளமை குறிப்பித்தக்கது.
Related posts:
மேதினக் கூட்டத்திற்கு பயன்படுத்தும் அரச பேருந்துகளுக்கு கட்டணம் செலுத்தப்பட வேண்டும்! - பிரதமர்
இயந்திரம் செயலிழப்பு - நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை!
கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் பரவலின் ஆபத்து நீங்காது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
|
|
|


