மாகாண சபைத் தேர்தல் குறித்து கலந்துரையாடப்படவில்லை – எந்தவொரு நாடும் அதற்கான அழுத்தமும் கொடுக்கவில்லை – அமைச்சர் கம்மன்பில தெரிவிப்பு!

மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக அரசாங்கம் எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேநேரம் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு எந்தவொரு நாடும் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அமைச்சர் உதய கம்மன்பில இதன்பேது குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்துடன் மாகாண சபைத் தேர்தலுக்கு தொடர்பில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான குறித்த ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்திட வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மாகாண சபை தேர்தல் விவகாரம் : கூடுகிறது ஆணைக்குழு!
அரசியல் குழப்ப நிலையால் எதிர்கால சந்ததிக்கு ஆபத்து - ஜனாதிபதிக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ம...
வறட்சியுடன் கூடிய காலநிலை - நீரை சிக்கமாக பயன்படுத்துமாறு பொது மக்களுக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பு...
|
|