மாகாண சபைகளுக்குட்பட்ட பாடசாலைகளில் 8,139 ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறை – ஓய்வு பெற்றோரை இணைக்க முடிவு என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Monday, June 24th, 2024

மாகாண சபைகளுக்குட்பட்ட பாடசாலைகளில் 8,139 ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வாக, ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்கள் மூன்றாண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை,தற்போது புதிதாக இணைக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் எதிர்காலத்தில் இணைக்கப்படவுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கைகள் 11,048 ஆக அதிகரிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேசிய பாடசாலைகளுக்கு 2,500 ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: