மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இவ்வருட இறுதிக்குள் 70 வீதம் மட்டுமே கிடைக்கும் – மத்திய திறைசேரி!
Friday, October 26th, 2018
இந்த ஆண்டு மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 70 வீத நிதி மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய திறைசேரி மாகாண திறைசேரி பணிப்பாளர்களிடம் தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம் நடப்பாண்டில் வடக்கு மாகாணத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நான்கு ஆயிரத்து 314 மில்லியன் ரூபா நிதியில் இரண்டு ஆயிரத்து 35 மில்லியன் ரூபா நிதி மட்டுமே மாகாணத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய இரண்டு ஆயிரத்து 279 மில்லியன் ரூபா பணம் இதுவரையில் வழங்கப்படவில்லை.
இதுவரை நிறைவுற்ற திட்டங்களின் 845 மில்லியன் ரூபாவுக்கான சிட்டைகள் மாகாணத்தில் தயார் நிலையில் உள்ளன. எதிர்வரும் மாதம் எஞ்சிய திட்டங்களும் முடிவுறுத்தப்படும் நிலைமையை எட்டியுள்ளன. இவ்வாறு 70 வீதமான நிதி இந்த ஆண்டு இறுதியிலும், எஞ்சிய 30 வீதமான நிதி அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் விடுவிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
மண்டைதீவில் சுற்றுலா மையத்தை துரிதகதியில் இயங்கவைப்பதற்கு நடவடிக்கை!
தொடரும் கனமழை காரணமாக திருகோணமலையின் பல பகுதிகள் நீரில் மூழ்கின – மக்கள் பெரும் அசளகரியம்!
மறைந்த எலிசபெத்தின் இறுதி கிரியைகளில் கலந்துகொள்ள இலண்டனுக்கு புறப்பட்டார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசி...
|
|
|


