மாகாணங்களுக்கு இடையில் புகையிரத சேவைகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை!

Monday, July 5th, 2021

மாகாணங்களுக்கு இடையில் புகையிரத சேவைகளை ஆரம்பிக்க கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை என்று புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால் கடந்த வாரத்தை போன்றே இவ்வாரமும் புகையிரத சேவைகள் இடம்பெறும் என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைவாக வரையறுக்கப்பட்ட புகையிரதங்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: