மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து இராணுவத் தளபதியின் ஆலோசனையின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படும் – போக்குவரத்து இராஜங்க அமைச்சர்!

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் அத்தியாவசிய சேவைகளுக்காக ரயில் மற்றும் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று போக்குவரத்து இராஜங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக அடுத்த வாரம் மாகாணங்களுக்குள் மாத்திரம் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் தற்போதைய கொரோனா தொற்று அனர்த்த நிலை இன்னும் குறைவடையவில்லை என இராணுவத்தளபதி எமக்கு அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தீர்மானம் மாகாணங்களுக்கிடையில் பேருந்து அல்லது ரயில் சேவைகள் இடம்பெறக்கூடாது என்பதாகும்.
இந்த தீர்மானத்தை மதிக்க வேண்டும் என்றும் போக்குவரத்து இராஜங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் அமுல் செய்யப்படமாட்டாது என தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் கொரோனா மரணங்களின் அடிப்படையில் எந்நேரமும் பயணக் கட்டுப்பாகள் விதிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
|
|