மலேரியா தொற்றியிருந்தால் உடன் சிகிச்சையளிக்கவும்!
Wednesday, April 13th, 2016
மலேரியா தொற்றுக்கு உள்ளான நோயாளியொருவர் இலங்கையில் கண்டுபிடிக்கப்படுவாராயின், அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் மலேரியா ஒழிப்புக் குழுவின் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மலேரியா தொற்றுக்கு உள்ளாகியிருந்த இந்தியர் ஒருவர், கடந்த 3ஆம் திகதியன்று நுவரெலியா பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே அமைச்சர் சேனாரத்ன மேற்கண்ட ஆலோசனையை வழங்கியுள்ளார்.
இலங்கையில் மலேரியா நோய் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இலங்கையர்கள் எவரும் இந்தத் தொற்றுக்கு உள்ளாகியில்லை. வெளிநாடுகளிலிருந்து வருபவர்களே, இந்த மலேரியா தொற்றுக்கு உள்ளான நிலையில் நாட்டுக்குள் வருகின்றனர்.
இனிவரும் காலங்களிலும் அவ்வாறான நோயாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்களாயின், அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்குமாறு, சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


