மலேசிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி!
Friday, December 16th, 2016
இலங்கைக்கு வந்து பயமின்றி முதலீடுகளை செய்யுமாறு மலேசிய முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் 03 ஆண்டுகளும் இலங்கையில் அபிவிருத்தியின் ஆண்டுகள் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், முதலீ்ட்டாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் தயார் என்றும் கூறியுள்ளார்.
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இடம்பெற்ற இலங்கை-மலேசிய வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இவ்வாறு கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
இலங்கை மற்றும் மலேசியாவின் முதலீட்டு சபை, ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் உயர் ஸ்தானிகராலயங்கள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. இதன்போது முதலீடு மற்றும் சந்தை வாய்ப்புக்களை மேலும் விரிவுபடுத்திக் கொள்வது மற்றும் புதிய பிரவேசத்தை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான உடன்படிக்கைகளும் செய்து கொள்ளப்பட உள்ளன.

Related posts:
|
|
|


