இலங்கையில் 5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை – ஐக்கிய நாடுகள் தெரிவிப்பு!
Friday, November 4th, 2022
இலங்கையில் குறைந்தது 5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
அந்த அலுவலகம் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.
இது நாட்டின் சனத்தொகையில் 26 வீதத்திற்கு சமம் எனவும் 96 வீதமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையைத் தயாரிக்க இலங்கையின் ஒன்பது மாகாணங்களின் 11 மாவட்டங்களில் உள்ள 2 ஆயிரத்து 871 குடும்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
தனிமைப்படுத்தில் தொடர்பில் இராணுவத்தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்!
வில்பத்து சரணாலயப் பகுதி காடழிப்பு விவகாரம் – வனப்பகுதி மீண்டும் செழிப்புற நடவடிக்கைகளை ரிஷாட் பதியூ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலர் உயிரிழப்பு - காரணத்தைக் கண்டறிவதற்கான விசேட ...
|
|
|


