மறவன்புலோவில் தற்கொலை அங்கி மீட்பு!
Wednesday, March 30th, 2016
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A32 பாதையில் உள்ள மறவன்புலோ பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் அத்துடன் கைக்குண்டுகளும் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீட்டில் கஞ்சா உட்பட்ட பல போதைப் பொருட்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அங்கு சோதனை நடவடிக்கைக்கு சாவகச்சேரி பொலிஸார் சென்றபோதே மேற்படி வெடி பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த வீட்டில் இருந்த சந்தேக நபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் தப்பிச் சென்ற குறித்த சந்தேகநபரை பொலிஸார் தேடி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:
பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலையை விரைவில் முடிவுக்கு கொண்டுவாருங்கள் - அமெரிக்கா!
விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு - குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு பரவல் அதிகரிக்கும் - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச...
|
|
|


