மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு உதவுவது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் கவனம்!

Monday, May 30th, 2022

இலங்கையில் தற்போது நிலவும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு உதவுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அடிப்படை சுகாதார சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான உதவிகளை வழங்குவதில் உலக சுகாதார ஸ்தாபனம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் கலாநிதி டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் குறிப்பிட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற உலக சுகாதார மாநாட்டின் போதே குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறப்பிடத்தக்கது

Related posts: