மின் கட்டணத்தை செலுத்த முடியாத மின் பாவனையாளர்களுக்கு 24 மாத சலுகை காலம் – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே அறிவிப்பு!

Tuesday, September 21st, 2021

நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக மின் கட்டணத்தை செலுத்த முடியாத மின் பாவனையாளர்களுக்கு 24 மாத சலுகை காலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே இன்றையதினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கொரோனா சூழ்நிலையால் அவர்கள் மின் கட்டணத்தை தவணைகளில் செலுத்த வேண்டும். அத்துடன் நிலுவையில் உள்ள மின் கட்டணங்களின் மாதாந்த தவணைக்கு சிறிய வட்டி வசூலிக்கப்படுமெனவும், வரும் நாட்களில் வசூலிக்கப்படும் வட்டி குறித்து நுகர்வோருக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போதைய சூழ்நிலையால் கடந்த இரண்டு மாதங்களில் இலங்கை மின்சாரசபைக்கு 44 பில்லியன் செலுத்த வேண்டியிருந்தது என்றும், மின்சார கட்டணத்தை செலுத்தக்கூடிய மக்கள் கூட தங்கள் மின்சார கட்டணத்தை செலுத்தவில்லை என்றும் அமைச்சர் இதன்போது சட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதியின் கருத்தின்படி, 2030 க்குள் சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை 70 சதவிகிதம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நிலக்கரி விநியோகஸ்தர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு தீர்க்கப்பட்ட பின்னரே நிலக்கரி விநியோகம் - அமைச்சர...
கடல், வான் இணைப்புகள் இந்தியாவுடனான இலங்கையின் இணைப்பை வலுவாக்கியுள்ளது – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!
யாழ். இந்தியத் தூதரகத்திற்கு புதிய துணைத் தூதுவராக சாய் முரளி இந்திய வெளியுறவு அமைச்சினால் நியமனம்!