மருந்து கொள்வனவுக்கு 10 மில்லியன் டொலர் – ஏனைய அத்தியாவசிய பொருட்களின் கொள்வனவுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் – உதவி வழங்க உலக வங்கி அனுமதி – நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Tuesday, April 12th, 2022

அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியினை வழங்குவதற்கு உலக வங்கி அனுமதியளித்துள்ளதாக நிதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

அதேநேரம், எதிர்வரும் இரண்டு வாரக்காலப்பகுதிக்குள் சமையல் எரிவாயு, மருந்து மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவிப்பதற்கு உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இதனிடையே சர்வதேச நாணய நிதியத்தின் உதவி தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று திங்கட்கிழமை திட்டமிடப்பட்டிருந்தது, எனினும் அது திட்டமிட்டபடி நடைபெறவில்லை என நிதியமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் நந்தலால் வீரசிங்க அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கைக்கான உதவிகள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் கொள்கை வகுப்பாளர்களுடன் கலந்துரையாடப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் மசாஹிரோ நோசாகி ப்ளூம்பெர்க்(Masahiro Nosaki Bloomberg) இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

எனினும் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


ஈ.பி.டி.பியிடம் அரசியல் பலத்தை வழங்கங்கள் : வடபகுதியில் காணப்படும் தொழிற்றுறை பிரச்சினைக்கு நிரந்தர ...
இலங்கையில் செலுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை - அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் த...
செயன்முறை பரீட்சைகளில் பங்குக்கொள்ள முடியாதோருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு - பரீட்சைகள் ஆணையாளர் அறிவி...