காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 7 பில்லியன் நிதி உதவி!

Saturday, January 13th, 2018

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, 45.27 மில்லியன் டொலர்கள் (6.9 பில்லியன் ரூபா) கடன் உதவியை இந்தியா வழங்கவுள்ளது. இதற்கான உடன்பாட்டில் இந்தியாவும் இலங்கையும் நேற்றுமுன்தினம் கையெழுத்திட்டுள்ளன.

புதுடில்லியில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்வில் நிதி அமைச்சின் செயலர் கலாநிதி சமரதுங்கவும், இந்தியாவின் எக்சிம் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் டேவிட் ரஸ்க்குயின்ஹாவும் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் எக்சிம் வங்கியிடம் இருந்து 45.27 மில்லியன் டொலர் கடனுதவியைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை கடந்த ஆண்டுமே மாதம் அனுமதி அளித்தது. இதனடிப்படையிலேயே இரண்டு நாடுகளின் அதிகாரிகளுக்கும் இடையில் இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை இலங்கையின் துறைமுக அதிகாரசபையே நடைமுறைப்படுத்தவுள்ளது.

Related posts: