ஈ.பி.டி.பியிடம் அரசியல் பலத்தை வழங்கங்கள் : வடபகுதியில் காணப்படும் தொழிற்றுறை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் – வேட்பாளர் விக்னேஷ்!

Sunday, August 2nd, 2020

ஈ.பி.டி.பியிடம் தமிழ் மக்களது அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டால் வடபகுதியில் எமது இளைஞர் யுவதிகள் எதிர்கொள்ளும் தொழிற்றுறை பிரச்சினைக்கு முழுமையான தீர்வு பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேட்பாளர் விக்னேஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிரந்தர நியமனமின்றி அசௌகரியங்களை எதிர்கொண்டுவரும் சுகாதார சிற்றூழியர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் மட்டுமே தமிழ் மக்களது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை கண்டுதரும் ஆற்றல் உள்ளது. அவர் நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட தமிழ் தலைவராக இருப்பதனால் சுயனலமின்றி கடந்த காலங்களில் எண்ணற்ற இளைஞர் யுவதிகளுக்கு பேதங்களின்றி தொழில் வாய்ப்புக்களை வழங்கியுள்ளார். ஆனாலும் அதை பெற்றுக்கொண்டவர்கள் அவருக்கான நன்றிக்கடனை இதுவரை காட்டாத நிலையால் அவரது கரங்களுக்கு அதிகரித்த அரசியல் பலம் கிடைக்காத நிலைமை தொடர்கின்றது.

இந்த நிலைமை இம்முறை மாற்றப்படவேண்டும். உங்கள் ஒவ்வாருவரது வாழ்வும் சுய கௌரவத்துடனும் நிறைவான பொருளாதாரத்துடனும் அமையவேண்டுமாக இருந்தால் அதை பெற்றுத்தரும் ஆற்றல் டக்ளஸ் தேவானந்தா என்ற ஒருவரிடமே உள்ளது.

மத்தியில் அவருக்கு இருக்கும் நல்லுறவும் அவரது தூர நோக்குள்ள செயற்றிட்ட பொறிமுறைகளும் இவற்றை பெற்றுக்கொள்வதற்கான சூழலை இலகுபடுத்தும் என்பதால் அவரது கரங்களை பலப்படுத்த வேண்டியது ஒவ்வொரு தமிழ் மகனதும் கடமையாகும.

அந்தவகையில் இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் எமது கட்சியினா ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வீணைச் சின்னதிற்கு உங்களது வாக்குகளை வாரி வழங்கி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரரங்களை பலப்படுத்துங்கள்.  உங்கள் கனவுகள் ஒவ்வொன்றும் நனவாகும் என்றார்.

Related posts: