மருந்து உற்பத்தியாளர்களுக்கு விசேட சலுகை – சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!
Monday, September 21st, 2020
இலங்கையில் புதிதாக முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் போது மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு விசேட சலுகை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நாட்டிற்கு தேவையான மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக ஆண்டுதோறும் 130 பில்லியன் ரூபா செலவு செய்யப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு செலவிடப்படும் அந்நிய செலவணியை சேமிக்கும் வகையிலே அரசாங்கம் இவ்வாறான திட்டங்களை முன்மொழிந்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
முதலாவது மார்பகப் புற்றுநோய் அறுவைச் சிகிச்சை!
யாழில் தொழில் மேம்பாட்டு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை!
நுவரெலியாவில் புதிய உயரமான கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு தடை – அமைச்சரவையும் அங்கீகாரம்!
|
|
|


