மருந்துகளின் விலையை மாற்ற மருந்தக உரிமையாளருக்கு உரிமை இல்லை – மருந்தக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!
Tuesday, September 20th, 2022இறக்குமதியாளர் மற்றும் அதன் உற்பத்தியாளர் மட்டுமே மருந்துகளின் விலையை மாற்ற முடியும் எனவும், விலையை மாற்ற மருந்தக உரிமையாளருக்கு உரிமை இல்லை எனவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதுள்ள மருந்து தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக சில மருந்தக உரிமையாளர்கள் மருந்துகளின் விலையில் மாற்றம் செய்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அது தொடர்பில், மருந்தகங்களை ஏற்கனவே சோதனையிட ஆரம்பித்துள்ளதுடன், ஹப்புத்தளை, பண்டாரவளை மற்றும் பதுளை பிரதேசங்களில் நேற்று (19) மருந்தகங்கள் பரிசோதிக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அமரர் இராஜரத்தினத்தின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் இறுதி அஞ்சலி
வேகமாக பரவி வரும் அம்மை நோய் தொடர்பில் அரசு எச்சரிக்கை!
சட்டவிரோதமான வழிகளில் வெளிநாட்டு நாணயங்கள் மாற்றும் மையங்களை சோதனையிட விசேட நடவடிக்கை!
|
|
|


