மருந்தகங்களை தற்காலிகமாக பதிவு செய்யும் நடவடிக்கைஇடை நிறுத்தம் – அமைச்சர் ராஜித சேனாரத்ன!

Friday, March 10th, 2017

நாட்டில் மருந்தகங்களை பதிவு செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் அமைந்துள்ள மருந்தகங்கள் தொடர்பாக தொகை மதிப்பை மேற்கொண்டதன் பின்னர் பதிவு பற்றிய தீர்மானம் எடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அகில இலங்கை மருந்தக உரிமையாளர் சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

ஒருவர் புகைப்பதை சுவாசிப்பதால் வருடாந்தம் 25 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். இதில் ஐந்து சதவீதமானோர் சிறுவர்கள் என்று அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.சகல நகரங்களிலும் அதிகளவிலான மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளமையினால் தமது செயற்பாடுகளுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். மருந்து விற்பனையின் மூலம் மக்களை பாதிப்படைய இடமளிக்கப்படமாட்டாது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்து வெளியிட்டுள்ளார்.

Related posts: