மருத்துவருக்கு 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை!

Saturday, April 28th, 2018

நெடுந்தீவு மருத்துவமனையில் பணியாற்றும் ஒரேயொரு மருத்துவருக்கும் கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

நெடுந்தீவில் வாழும் 4 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டவர்கள் நம்பியுள்ள ஒரேயொரு மருத்துவசாலைக்கு 2 மருத்துவர்களுக்கான ஆளணி உள்ளது. இருப்பினும் ஒரு நிரந்தர மருத்துவர் கூடக் கிடையாது. அங்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சு ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவரை நியமித்துள்ளது. அவரே அப் பகுதிக்கான மருத்துவத் தேவையை நிவர்த்தி செய்கின்றார்.

இந்த நிலையில் குறித்த மருத்துவருக்கும் 3 மாத காலமாக எந்த சம்பளமும் வழங்கப்படவில்லை எனச் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு தெரிவிக்கையில் –

நெடுந்தீவு மருத்துவமனையில் பணியாற்ற எந்த மருத்துவர்களுமே முன்வராத காரணத்தால் அங்கு வசிக்கும் ஓய்வு பெற்ற மருத்துவர் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்களின் சம்பளத்துக்கான அனுமதி பொதுச்சேவை ஆணைக்குழுவில் பெற்ற பின்பே வழங்க முடியும் என்பதே நடைமுறை.

இதன் காரணத்தினாலேயே தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் குறித்த அனுமதி தற்போது கிடைக்கப் பெற்றுள்ளமையால் உடன் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Related posts: