ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஜோன் கெரி இடையில் சுவிட்சர்லாந்தில் விசேட சந்திப்பு!
Thursday, January 18th, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் இடையில் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நேற்றையதினம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டுடன் இணைந்து குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த மாநாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் ஆகியோரையும் ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது” நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் பல முக்கிய சவால்களை இலங்கை வெற்றிகரமாக முகம் கொடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பிரபல சட்டத்தரணி செலஸ்ரின் ஸ்ரனிஸ்லஸ் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைவு!
மரண தண்டனை - இரத்து செய்வதற்கான தீர்மானம் கொண்டுவரின் அது தேசிய துக்க தினம்!
சேதன விவசாயத்துக்கான இலங்கையின் அணுகுமுறை மேலும் பல நாடுகளுக்கு உந்துசக்தியாக அமையும் - ஐ.நா உணவு ம...
|
|
|


